உள்ளூர் செய்திகள்
ஆம்னி பஸ்கள்

நாளை முழு ஊரடங்கு - ஆம்னி பஸ்கள் இயங்காது

Published On 2022-01-22 11:14 GMT   |   Update On 2022-01-22 12:37 GMT
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு கடந்த 9-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றைய தினம் பொது போக்குவரத்தான பஸ், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மொபைல் செயலிகள் மூலமாக ஆட்டோ, டாக்சிகளை முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரசு பஸ்கள் இயங்காத நிலையில் நாளை ஒருநாள் ஆம்னி பஸ்களும் இயங்காது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News