உள்ளூர் செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்ற காட்சி.

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Published On 2022-01-22 10:21 GMT   |   Update On 2022-01-22 10:21 GMT
சுமார் 150 பசுக்கள், 250 ஆடுகள், 70 நாய்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டியில் கால்நடை துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை மண்டல உதவி இயக்குனர் பரிமளராஜ் தலைமை வகித்தார். அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்அர்ஜுனன் வரவேற்றார்.

முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, கருவூட்டல், சினை பரிசோதனை,தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம்,குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை,சுண்டு வாத அறுவை சிகிச்சை,கால்நடைகள் ஆண்மை நீக்கம் செய்தல் ஆகியவை நடைபெற்றது.

இதில் சுமார் 150 பசுக்கள், 250 ஆடுகள், 70 நாய்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கால்நடை ஆய்வாளர் சத்யா, உதவியாளர் செங்குட்டுவன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News