உள்ளூர் செய்திகள்
கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

சங்கரன்கோவில் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம்

Published On 2022-01-21 10:26 GMT   |   Update On 2022-01-21 10:26 GMT
சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ஒன்றியம் வீரிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் லாலாசங்கரபாண்டியன் முகாமினை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் ராமலெட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா ஆகியோர் முகாமில் சிறப்புரையாற்றினர்.

 முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளித்தல், சினை பார்த்தல், சினை ஊசி போடுதல் மற்றும் தாது உப்பு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறந்த கிடேரி கன்றுகளுக்கு மற்றும் கால்நடை வளர்ப்பு மேலாண்மைக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. சங்கரன் கோவில் கால்நடை உதவி இயக்குநர் ரஹமத்துல்லா தொழில்நுட்பஉரை வழங்கினார். 

இதில் தி.மு.க. வீரிருப்பு கிளை செயலாளர் முருகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வடக்குபுதூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் வசந்தா செய்திருந்தார்.
Tags:    

Similar News