உள்ளூர் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் படி பூஜை விழா

களக்காடு அய்யப்பன் கோவிலில் படி பூஜை விழா

Published On 2022-01-19 09:12 GMT   |   Update On 2022-01-19 09:12 GMT
களக்காடு அய்யப்பன் கோவிலில் படிபூஜை விழா நடைபெற்றது.
களக்காடு:

களக்காடு அய்யப்பன் கோவிலில் மகரஜோதி பூஜைக்காக கடந்த 13-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 14-ந் தேதி மகரஜோதி பூஜை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு தங்கஆபரணம் அணிவிக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து தை மாதம் 5-ம் நாளன்று சிறப்பு படிபூஜை நடந்தது.  

இதையொட்டி, களக்காடு ஆனந்த நடராஜர் திருவாசக குழுவினர் சார்பில் திருவாசக முற்றோதுதல் நடந்தது. மாலையில் அய்யப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

அதன்பின் சன்னதி முன்புள்ள 18 படிகளுக்கும் மாலைகள், வஸ்திரங்கள் அணிவிக் கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப் பட்டது.  அய்யப்பனுக்கும் தீப ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News