தொழில்துறை அமைச்சரிடமிருந்த சர்க்கரை ஆலைகள் துறையானது உழவர் நலத்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கம்
பதிவு: ஜனவரி 12, 2022 18:29 IST
தலைமைச் செயலகம்
சென்னை:
தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தொழில்துறைத் துறையிலிருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவு தனியே பிரிக்கப்பட்டு, தனித்துறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியன இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இயற்கை வளத்துறையை நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூடுதலாக கவனிப்பார் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 3 அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தொழில்துறை அமைச்சரிடமிருந்த சர்க்கரை ஆலைகள் துறையானது உழவர் நலத்துறை அமைச்சகத்துக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சரிடமிருந்த விமானப் போக்குவரத்து துறையானது தொழில்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகமானது தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :