உள்ளூர் செய்திகள்
முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்திய காட்சி

முதியோர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் செலுத்த ஏற்பாடு - சென்னை மாநகராட்சி

Published On 2022-01-10 23:11 GMT   |   Update On 2022-01-10 23:11 GMT
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள், சுகாதார துறையினருக்கு 3வது தவணை முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநிலை நீடித்தால் அடுத்த சில நாட்களுக்குள் தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 70 ஆயிரத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் மொத்த பாதிப்புகளில் 50 சதவீதம் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது கவலை தருவதாக மாறியுள்ளது. எனவே இங்கு கொரோனா தடுப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

இதன் ஒருபகுதியாக, தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

60 வயதை கடந்த ஒரு டோஸ் செலுத்தாதவர்களுக்கும், இரண்டாவது டோஸ் செலுத்த காலம் கடந்தவர்களுக்கும் இல்லம் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, தடுப்பூசி செலுத்த 1913, 044-2538 4520, 044-4612 2300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு இல்லங்களிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News