உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பஞ்சாப் அரசை கண்டித்து நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-10 10:50 GMT   |   Update On 2022-01-10 10:50 GMT
பஞ்சாப் அரசை கண்டித்து நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:

பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு பிரதமர் மோடிக்கு முறையான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, நெல்லை இந்து மக்கள் கட்சி சார்பாக ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். 

இதைத்தொடர்ந்து இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் மற்றும் நிர்வாகிகள் இசக்கி பாண்டியன், சீனிவாசன் உள்பட பலர் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலையருகே கூடி அங்கிருந்து ஊர்வலமாக ரெயில்நிலையம் புறப்பட முயன்றனர். 

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினர். 

இதைதொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் அந்த இடத்திலேயே பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News