வருமான வரம்பு உயர்வால் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி உதவித்தொகை திட்டம் - வருமான வரம்பு உயர்வு
பதிவு: ஜனவரி 04, 2022 12:13 IST
கோப்புபடம்
திருப்பூர்:
அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது.
இதை ரூ.2.50 லட்சமாக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதுகலை, பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு, கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :