உள்ளூர் செய்திகள்
சிலைகளை திறந்து வைத்த முக ஸ்டாலின்

தஞ்சையில் அண்ணா, கருணாநிதி வெண்கல சிலைகளை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2021-12-29 23:31 GMT   |   Update On 2021-12-29 23:31 GMT
தஞ்சாவூரில் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து, வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயம் அமைந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது கலைஞர் அறிவாலய வளாகத்தில் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலையும் திறந்துவைக்கப்பட்டது.

இதற்கிடையே, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் முழு உருவச் சிலைகள் அங்கு நிறுவப்பட்டது. ஒவ்வொரு சிலையும் 11½ அடி உயரம் கொண்டது. இவை சென்னை மீஞ்சூரில் செய்யப்பட்டவையாகும்.

இந்நிலையில், தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி முழு உருவ வெண்கல சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ரிமோட் மூலம் திறந்து வைத்தார். அதன்பின் கலைஞர் அறிவாலயத்திற்குள் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

Tags:    

Similar News