உள்ளூர் செய்திகள்
மழை

கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை- தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது

Published On 2021-12-29 09:39 GMT   |   Update On 2021-12-29 09:39 GMT
கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் தாளடி நடவு பயிர்கள் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இயல்பு நிலை தொடங்கி கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்தது. திடீரென மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது.

தொடர்ந்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், பழையனூர், நாகங்குடி, பண்டுதக்குடி, நாகங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களிலும் வயல்களிலும் மழைநீர் தேங்கியது.
Tags:    

Similar News