உள்ளூர் செய்திகள்
வைகோ

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்- மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

Update: 2021-12-18 08:27 GMT
‘தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்து இருப்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் சாதனை மகுடத்தில் வைரமாக ஒளி வீசுகிறது.

இந்த அரசாணையின் மூலம், தி.மு.க. அரசு தமிழ் அரசு, தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டி இருப்பதற்கும், இந்த ஒற்றை அரசாணையின் மூலம் “நாம் யார்?” என்று ஓங்கி சிலரின் முகத்தில் அறைந்து இருப்பதற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News