உள்ளூர் செய்திகள்
விக்கிரமராஜா

கடைகளுக்கு ஒரே சீரான வாடகையை அமல்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலினிடம் விக்கிரமராஜா மனு

Published On 2021-12-14 08:08 GMT   |   Update On 2021-12-14 09:44 GMT
உள்ளாட்சி கடைகள், நகராட்சி கடைகள், அறநிலையத் துறை கடைகள், ஸ்மார்ட் சிட்டியால் பாதிக்கபட்ட கடைகள் அனைத்தையும் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கே திரும்ப தரவேண்டும்.

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று கட்டணமில்லா வணிகர் நல வாரிய உறுப்பினர்களாக வணிகர்களை இணைத்துக் கொள்ளும் காலத்தை மார்ச் வரை நீட்டித்து தந்ததற்கு நன்றி.

பதிவு பெற்ற வணிகர் சங்கங்களின் பரிந்துரையை ஏற்று அனைத்து வணிகர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும்.

 


 

உள்ளாட்சி கடைகள், நகராட்சி கடைகள், அறநிலையத் துறை கடைகள், ஸ்மார்ட் சிட்டியால் பாதிக்கபட்ட கடைகள் அனைத்தையும் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கே திரும்ப தரவேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே சீரான வாடகையை முறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும்.

வணிகர் நல வாரியத்தை சீரமைத்து செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தது.

விக்கிரமராஜாவுடன் ஏ.எம்.சதக்கத்துல்லா, வி.பி.மணி, கே.ஜோதிலிங்கம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News