உள்ளூர் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவில்

தடுப்பூசி சான்றிதழுடன் வந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதி

Published On 2021-12-11 16:40 GMT   |   Update On 2021-12-11 16:40 GMT
13ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தம் நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தமிழக அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா 3-வது அலையாக கருதப்படும் ஒமைக்ரான் பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 13 ஆம் தேதி முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News