உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம்- டி.டி.வி.தினகரன் கண்டனம்

Published On 2021-12-08 05:22 GMT   |   Update On 2021-12-08 05:22 GMT
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டதற்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதா படம் தி.மு.க.வினரால் அகற்றப்பட்டது. கண்டனத்திற்குரியது. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது சரியானதல்ல. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய பிறகும் இத்தகைய அதிகார அத்துமீறல்கள் நடைபெறுவதற்கு தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News