உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் ஆவணங்களை புதுப்பிக்காமல் இயங்கும் வாகனங்களுக்கு அபராதம் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Published On 2021-12-04 07:19 GMT   |   Update On 2021-12-04 07:19 GMT
வடக்கில் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

கொரோனா தொற்று பரவல் காரணமாக வாகன ஆவண புதுப்பிப்பு 2020, மார்ச்  31ல் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டு அக்டோபர் 31 வரை7 முறை காலஅவகாசம் நீட்டித்தும் பலர் ஆவணம் புதுப்பிக்காமல் அலட்சியமாக இருந்து வந்தனர்.

இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஆவணம் புதுப்பிக்காத, தகுதிச்சான்றிதழ் பெறாத வாகனங்கள் குறித்து இரு வாரங்களாக ஆய்வு நடத்தப்பட்டது. 

இதில் தெற்கில் சரக்கு ஆட்டோ, சுற்றுலாவேன் என  20 வாகனங்கள் பிடிபட்டன. மொத்தம் ரூ. 2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வடக்கில் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2 ஆர்.டி.ஓ., அலுவலகம் சேர்த்து மொத்தம் 50 வாகனங்களுக்கு ரூ.3.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கூறுகையில், சரக்கு ஆட்டோக்கள் அதிகளவில் ஆவணம் புதுப்பிக்காமல் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். இதுவரை ஆவணம் புதுப்பிக்காதவர், தகுதிச்சான்றிதழ் பெறாதவர் உடனடியாக வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு வந்து அல்லது ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News