செய்திகள்
கொலை செய்யப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Update: 2021-11-27 04:04 GMT
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதன் (வயது 51), ஆடு திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில்  மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News