செய்திகள்
தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசியை வீணாக்காமல் செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2021-11-21 14:37 GMT   |   Update On 2021-11-21 14:37 GMT
சென்னையில் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை:

தமிழகத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில், தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தினர். 

சென்னையில் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பொது சுகாதாரத்துறையின் விதிகளின்படி பொது இடங்களில் வருவோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரவேண்டும் என சொல்லப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசியை வீணாக்காமல், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News