செய்திகள்
வீடுகளை மழைநீர் மற்றும் கழிவுநீர் சூழ்ந்துள்ள காட்சி

திருத்தணி அருகே மழைநீருடன் கழிவு நீரும் வீட்டுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

Published On 2021-11-20 09:39 GMT   |   Update On 2021-11-20 09:44 GMT
திருத்தணி அருகே கனமழையால் அந்த பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீரும் மழை நீரும் கலந்து வீட்டிற்குள் புகுந்தது.

திருத்தணி:

வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் குளங்கள் நிரம்பி வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டாபிராமபுரம் ஊராட்சிபத்மாவதி நகரில் உள்ள இருளர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு‌ கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீரும் மழை நீரும் கலந்து வீட்டிற்குள் புகுந்தது.

இதனால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்.

மழை காலங்களில் இது போன்ற நிலை தொடர்வதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News