செய்திகள்
மஞ்சள் சாகுபடி.

மஞ்சள் சாகுபடியில் அவிநாசி விவசாயிகள் ஆர்வம்

Published On 2021-11-09 08:06 GMT   |   Update On 2021-11-09 08:06 GMT
இந்தாண்டு அவிநாசி வட்டத்தில் 100 முதல் 500 ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவிநாசி:

அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம், சேவூர், நடுவச்சேரி உள்ளிட்ட இடங்களில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

சில ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால் மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தது. பொதுவாக ஜூலை - ஆகஸ்டு  மாதங்களில் மஞ்சள் விளைச்சல் களைகட்டும். இந்தாண்டு அவிநாசி வட்டத்தில் 100 முதல் 500 ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது கடந்தாண்டை விட அதிகம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 

‘மஞ்சள் ஓராண்டு பயிராக இருப்பதால் விலையில் லாபம் கிடைத்தால் மட்டுமே மஞ்சள் பயிரிடுவர். முந்தைய ஆண்டுகளில் மஞ்சளுக்கு நல்ல விலை இல்லை. 

இந்தாண்டு ஓரளவு விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமையை உருவாக்கவும் ரூ.1.14 கோடியில்  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம்  வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அவிநாசி வட்டாரத்துக்கு 20 ஆயிரம் தேக்கு நாற்று, 500 வேம்பு நாற்றுகள் இலக்கீடாக ஒதுக்கப்பட்டு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 

நடவு செய்யப்படும் அனைத்து மரக்கன்றுகளுக்கும் மரம் ஒன்றுக்கு ரூ.7 வீதம் வளர்ப்பு மானியமாக அடுத்தாண்டு முதல் வழங்கப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News