செய்திகள்
கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி பேசிய காட்சி.

பல்லடம் - காரணம்பேட்டை சாலையை நான்குவழி சாலையாக மாற்ற காங்கிரஸ் கோரிக்கை

Published On 2021-11-01 10:06 GMT   |   Update On 2021-11-01 10:06 GMT
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பல்லடம் நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பல்லடம்:

பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் பனப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டார தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இதில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாளில் மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரசார் உறுதி மொழி ஏற்றனர். 

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பல்லடம் நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். 

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பல்லடம்&காரணம்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். 

பல்லடம் அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். 

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் ஜேம்ஸ், சாகுல் அமீது, செந்தில், ருத்ரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News