செய்திகள்
சசிகலா

சசிகலா மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது-அ.தி.மு.க. சட்ட நிபுணர் தகவல்

Published On 2021-10-21 10:03 GMT   |   Update On 2021-10-21 10:03 GMT
அ.தி.மு.க.வை தற்போது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் இருவருமே கையெழுத்திட்டு பணியாற்றி வருகிறார்கள்.
சென்னை:

சசிகலா மீது அளிக்கப்பட்டுள்ள புகார் மீது எதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும்? என்பது பற்றி அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சட்ட நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ஒரு நிறுவனத்தை ஒருவர் நடத்தி வரும்போது வேறொருவர் அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு நான்தான் அதன் உரிமையாளர் என்று கூறுவது சட்ட விரோதம் ஆகும். அந்த வகையில் அ.தி.மு.க.வை தற்போது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் இருவருமே கையெழுத்திட்டு பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாடும் வகையில் தற்போது இல்லாத ஒரு பதவியில் (பொதுச் செயலாளர் பதவி) தான் இருப்பதாக கூறிக்கொண்டு சசிகலா செயல்படுவது முழுக்க முழுக்க சட்டவிரோதம் ஆகும். இதற்காக 419 ஐ.பி.சி. சட்டப்பிரிவில் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. இல்லாத ஒரு தகவலை கூறி பொதுமக்களை நம்பவைத்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது இந்த சட்டப்பிரிவில் வழக்கு போடுவது வழக்கமாகும்.

அதேபோன்று இரு பிரிவினர் இடையே கலகத்தை விளைவிக்கும் வகையில் சசிகலா செயல்பட்டு வருகிறார். இதற்காக 153 ஏ என்ற சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க முடியும். மக்கள் மத்தியில் தான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்று கூறி தவறான தகவலை கொண்டு செல்லும் குற்றத்துக்காக 505 (பி) என்கிற சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News