செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஐ.ஜி ஆய்வு

Published On 2021-10-20 10:10 GMT   |   Update On 2021-10-20 10:10 GMT
சென்னை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி., அபின் தினேஷ் மோடக் திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்:

மத்திய, மாநில அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விருது வழங்கப்படுகிறது. ஸ்டேஷன் நிர்வாகம் பதிவேடு பராமரித்தல், திருட்டு பொருட்கள் மீட்பு, சட்ட விதிகளை முறையாக பின்பற்றுவது, முன்னெச்சரிக்கை கைது, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது, ஆன்லைனில் புகார், ஸ்டேஷன் பராமரிப்பு ஆகியவை கவனத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது.

அதன்படி 2020ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி., அபின் தினேஷ் மோடக் திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். 

ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் ஆய்வு நடந்தது. இதில் ஸ்டேஷன் வளாகம், பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்டவை பார்வையிட்டு சென்றார். ஆய்வின் போது துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News