செய்திகள்
கோப்புபடம்

தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற மானியம் - பயனாளிகள் தேர்வு

Published On 2021-10-19 08:45 GMT   |   Update On 2021-10-19 08:45 GMT
மாவட்டம் தோறும் சாகுபடி நிலப்பரப்பை அதிகப்படுத்த தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

மத்திய, மாநில அரசு திட்டங்களில், விவசாயிகளுக்கு அதிகப்படியான மானிய உதவி செய்து வேளாண் பணி ஊக்குவிக்கப்படுகிறது. தரிசு நிலத்தை மேம்படுத்தி விளை நிலமாக மாற்றி தானியம், பயறு வகைகள் சாகுபடி செய்ய தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

முதல்கட்டமாக மேய்ச்சல் நிலமாக மாறியுள்ள விவசாய நிலங்கள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்பட வேண்டுமென வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டம் தோறும் சாகுபடி நிலப்பரப்பை அதிகப்படுத்த தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தரிசு நிலங்களை சுத்தம் செய்து சமன் செய்து 70 சதவீதம் அளவுக்கு தானிய வகை, 25 சதவீதம் அளவுக்கு பயறு வகைகள், 5 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வித்து பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தேர்வு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News