செய்திகள்
வானதி சீனிவாசன்

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- வானதி சீனிவாசன் மீது வழக்கு

Published On 2021-10-08 07:51 GMT   |   Update On 2021-10-08 07:51 GMT
கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., உள்பட 14 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை:

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க கோரி பா.ஜனதா கட்சி சார்பில் கோவை அவினாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே. செல்வக்குமார் உள்பட 14-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 144 தடை உத்தரவை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., உள்பட 14 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், தொற்று நோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News