செய்திகள்
கோப்புபடம்

சம்பா சாகுபடி - விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்

Published On 2021-10-08 05:57 GMT   |   Update On 2021-10-08 05:57 GMT
கூடுதல் விவரங்களை வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டும் உழவன் செயலி மூலமும் அறியலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்படும் சம்பா பயிருக்கு எதிர்பாராத விதமாக இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பை சரி செய்ய உதவும் வகையில் பிரதமர் திருத்திய பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படுகிறது.

இந்த சாகுபடி செய்த விவசாயிகள் நவம்பர் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பாஸ்புக், ஆதார் நகல், பட்டா மற்றும் அடங்கல் சான்றுகளுடன், வேளாண் கூட்டுறவு வங்கி, வணிக வங்கி மற்றும் சேவை மையங்கள் மூலம் உரிய பிரீமியம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை, தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் களை தொடர்பு கொண்டும் உழவன் செயலி மூலமும் அறியலாம் என திருப்பூர் கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News