செய்திகள்
கோப்புபடம்

ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை உயர்த்த கூடாது - சைமா சங்கம் வலியுறுத்தல்

Published On 2021-10-06 05:18 GMT   |   Update On 2021-10-06 05:18 GMT
கடன் திருப்பி செலுத்த அவகாசம், அவசர கால கடன் என அரசு திட்டங்களால் தற்போது 65 சதவீத அளவில் பின்னலாடை உற்பத்தி நடக்கிறது.
திருப்பூர்:

ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை உயர்த்த கூடாது என ‘சைமா’ சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிகிறோம். கொரோனாவால் பின்னலாடை துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

கடன் திருப்பி செலுத்த அவகாசம், அவசர கால கடன் என அரசு திட்டங்களால் தற்போது 65 சதவீத அளவில் பின்னலாடை உற்பத்தி நடக்கிறது. தற்போது பின்னலாடைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதனை 12 சதவீதமாக உயர்த்தினால் ஆடை வாங்க சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுவர். எனவே ஆயத்த ஆடைகள் மீதான ஜி.எஸ்.டி., வரியை 5 சதவீதம் என்கிற நிலையிலேயே சீராக தொடர வேண்டும்.

இதுகுறித்து ஜி.எஸ்.டி., கவுன்சிலுடன் பேசி பரிசீலித்து வரி உயர்த்தும் முடிவை கைவிட செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News