செய்திகள்
தடுப்பூசி

கொட்டும் மழையிலும் ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்

Published On 2021-10-04 11:39 GMT   |   Update On 2021-10-04 11:39 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் தடுப்பூசி முகாம்களில் மக்கள் வருகை குறைந்து காணப்பட்டது.
ராமநாதபுரம்:

கொரோனா 3-ம் அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி நேற்று மாவட்டம் முழுவதும் 577 இடங்களில் 59 ஆயிரத்து 495 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் தடுப்பூசி முகாம்களில் மக்கள் வருகை குறைந்து காணப்பட்டது.

நகராட்சி, பேரூராட்சி வார்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராமப் பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையம், சமுதாய கூடங்களில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பல்வேறு இடங்களில் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்து வந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த முகாம்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று ராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்தார்.
Tags:    

Similar News