செய்திகள்
பணம்

இனி வெளிநாட்டு இந்தியர்கள், தாயகத்துக்குப் பணம் அனுப்புவது சுலபம்

Published On 2021-09-29 08:32 GMT   |   Update On 2021-09-29 10:37 GMT
டிஜிட்டல் வாலட் மூலம் இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணம் அனுப்ப முடியும்.
சென்னை:

சர்வதேச நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்புவதை சுலபமாக்கியுள்ளது பேடிஎம் நிறுவனம்.

அந்த நிறுவனம், சர்வதேச அளவில் பல நாடுகளில் பணப் பரிமாற்றம் செய்யும் ரியா என்கிற நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் வாலட் மூலம் இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்தில் இருக்கும் தங்களது உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எளிய வழியில் சுலபமாக பணப் பரிமாற்றம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.


டிஜிட்டல் முறை பணப் பரிமாற்றம் என்பதனால், ஒரு இடத்திலிருந்து பணம் அனுப்பியவுடன் அது ஒரு சில நொடிகளில் பரிமாற்றம் ஆகும் நிலையும் உருவாகியுள்ளது.

இப்படி டிஜிட்டல் வாலட்டில் வெளிநாடுகளில் இருந்து பணத்தை நேரடியாக அனுப்பும் நடைமுறையை இந்தியாவில் முதல் முறையாக கொண்டு வரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது பேடிஎம்.

Tags:    

Similar News