செய்திகள்
கைது

மதுரையில் ஆயுதங்களுடன் 4 ரவுடிகள் கைது

Published On 2021-09-28 09:15 GMT   |   Update On 2021-09-28 09:15 GMT
மதுரை மாநகரில் போலீசாரின் ரவுடிகள் களையெடுப்பு பணி தொடரும் என்று போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரை மாநகரில் கடந்த ஒரு வாரமாக ரவுடிகள் வேட்டை நடந்து வருகிறது. இதில் 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மதுரை எல்லீஸ் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சாதிக்பாட்சா (வயது 22) என்பவர் நேற்று கென்னட் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது வைத்தியநாதபுரம் முனியாண்டி கோவில் தெரு, ஆறுமுகம் மகன் அபிஷேக் (23) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 600 ரூபாய் பறித்துச் சென்றார்.

இதுதொடர்பாக சாதிக்பாட்சா புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவம்...

மதுரை விளாங்குடி புது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (59). இவர் நேற்று கணபதி நகர் கடைக்கு சாப்பிட வந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் விஜயனிடம் கத்தியை காட்டி மிரட்டி 600 ரூபாயை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக விஜயன் கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பி.பி. குளம் மருதுபாண்டியர் தெரு பழனிவேல் மகன் பூபதி ராகவேந்திரா (19), பூமி உருண்டை தெரு வைரவன் மகன் விக்ரம் என்ற காக்கா மண்டையன் (19), பீபீ குளம் இந்திராநகர் நாகூர் பிச்சை மகன் ஜமால் சிக்கந்தர் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாநகரில் போலீசாரின் ரவுடிகள் களையெடுப்பு பணி தொடரும் என்று போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News