செய்திகள்
அபராதம்

சோழபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 7 பேருக்கு அபராதம்

Published On 2021-09-27 14:40 GMT   |   Update On 2021-09-27 14:40 GMT
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
கும்பகோணம்:

சோழபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் சோழபுரம் பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 7 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 7 கடைகளின் உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News