செய்திகள்
மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கும் இயக்க போராட்டம்

Published On 2021-09-07 08:32 GMT   |   Update On 2021-09-07 08:32 GMT
உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலம், பயிர்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
  
உயர்மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கும் இயக்க  போராட்டம் நடைபெற்றது. 

அவர்கள் கொடுத்த மனுவில், உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலம், பயிர்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும், கருணை தொகை 100 சதவீதம் வழங்க வேண்டும், மாத வாடகை, துரவுகிணறு, ஆழ்துளை கிணறு கட்டிடங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். 

புதிய திட்டங்களை கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும். இதனை பவர்கிரிட் நிர்வாகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  
Tags:    

Similar News