செய்திகள்
உடுமலையில் வரிவசூலில் ஈடுபட்ட ஊராட்சி பணியாளர்கள்.

ஊராட்சிகளில் வரி வசூல் பணிகள் தீவிரம்

Published On 2021-09-02 08:46 GMT   |   Update On 2021-09-02 08:46 GMT
வீடு, தொழில், கல்வி நிறுவனம், குடிநீர் உள்ளிட்ட வரி இனங்கள் வாயிலாக ஊராட்சிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
உடுமலை:

உடுமலை ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. வீடு, தொழில், கல்வி நிறுவனம், குடிநீர் உள்ளிட்ட வரி இனங்கள் வாயிலாக ஊராட்சிகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பலரும் வரி இனங்களை முறையாக செலுத்தவில்லை. வரி வசூல் நிலுவை காரணமாக பல ஊராட்சிகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஊராட்சிகளில் வரி வசூல் செய்ய ஊராட்சி செயலாளர் தலைமையிலான குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். வீடு வீடாக செல்லும் ஊராட்சி பணியாளர்கள் வரி வசூலித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்கியும் வருகின்றனர்.

இதுகுறித்து பி.டி.ஓ., ரொனால்ட் செல்டன் கூறுகையில்:

கொரோனா பாதிப்பு காரணமாக ஊராட்சிகளில் வரி இனங்கள் செலுத்த காலஅவகாசம் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க வரி வசூலில் முனைப்பு காட்டப்படுகிறது என்றார்.
Tags:    

Similar News