செய்திகள்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஆட்சி பொறுப்பேற்று 116 நாளில் 2.60 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

Published On 2021-09-01 09:34 GMT   |   Update On 2021-09-01 10:36 GMT
தமிழகத்தில் 1,450 கலை அறிவியல் கல்லூரிகளில் 10 லட்சம் மாணவர்கள் படிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை லயோலா கல்லூரியில் நடந்த தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் தடுப்பூசி தேவையை அறிந்து மத்திய அரசிடம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக பெற்று வருகிறார். இதுவரையில் 3 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 313 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் 122 கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்க விரைவுபடுத்தப்படும். மாணவர் சேர்க்கையின் போதே லயோலா கல்லூரியில்
கொரோனா தடுப்பூசி
விதிமுறை சொல்லி தரப்படுகின்றது.


அனைத்து மாணவர்களிடம் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. வகுப்பறையிலும் இந்த ஆய்வு நடக்கிறது.

தமிழகத்தில் 1,450 கலை அறிவியல் கல்லூரிகளில் 10 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். 587 பொறியியல் கல்லூரிகளில் 4.25 லட்சம் மாணவர்களும், பாலிடெக்னிக்கில் 2.50 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள்.

ஏறத்தாழ 18 லட்சம் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்துகிறார்களா? என்று ஆய்வு செய்கிறார்கள். அதன் பின்னர்தான் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஆட்சியில் 61 நாட்களில் 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்று 116 நாளில் 2 கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்களை விட 2 மடங்கு அதிகமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எழிலன் எம்.எல்.ஏ., துணை கமி‌ஷனர்கள் விஷூ மகாஜன், ‌ஷரண்யா அரி, சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், லயோலா கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News