செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை மக்களுக்கு 8 மாதத்துக்கு தேவையான குடிநீர் உள்ளது- பொதுப்பணித்துறை

Published On 2021-08-21 08:41 GMT   |   Update On 2021-08-21 08:41 GMT
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி ஆகும். இதில் 2491 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
சென்னை:

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, தேர்வாய்கண்டிகை ஆகிய நீர் தேக்கங்களில் போதிய அளவு தண்ணீர் உள்ளது.

அடுத்த 8 மாதங்களுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் இந்த நீர் தேக்கங்களில் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி ஆகும். இதில் 2491 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

புழல் நீர் தேக்கத்தின் கொள்ளளவு 3330 கன அடி. அங்கு 2613 கன அடி தண்ணீர் உள்ளது.

சோழவரம் நீர் தேக்கத்தில் மொத்த கொள்ளளவு 1081 கன அடி. அங்கு 612 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதேபோன்று பூண்டி நீர் தேக்கத்தில் 2256 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அதன் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி ஆகும். தேர்வாய்கண்டிகையின் முழு கொள்ளளவு 500 கன அடி ஆகும். அங்கு 486 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

இதன் மூலம் அடுத்த 8 மாதங்களுக்கு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான 1.75 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் போதிய தண்ணீர் உள்ளது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Tags:    

Similar News