செய்திகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்.1ந்தேதி பள்ளிகளை திறக்க அரசு உறுதி- அமைச்சர் தகவல்

Published On 2021-08-21 08:07 GMT   |   Update On 2021-08-21 08:07 GMT
மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திருச்சி:

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில்  அரசு உறுதியாக உள்ளது. பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.



* தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன.

* மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை  எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News