செய்திகள்
கோப்புபடம்

பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை - நாளை நடக்கிறது

Published On 2021-08-18 10:16 GMT   |   Update On 2021-08-18 10:16 GMT
அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14 ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித்துறையின் மூலம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க  வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில் அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14 ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 

தொடர்ந்து 2021-2022 ம் கல்வியாண்டிற்கு 5.7.2021 முதல் கடந்த 13-ந்தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களைவிட, கூடுதலாக 146 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

எனவே மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே விண்ணப்பித்த பெற்றோர்கள் நாளை (19-ந்தேதி) காலை 9 மணிக்கு தாங்கள் விண்ணப்பித்த பள்ளியில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News