செய்திகள்
பாஜக

குமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பாரதிய ஜனதா நிர்வாகிகள் 450 பேர் மீது வழக்கு

Published On 2021-08-05 04:45 GMT   |   Update On 2021-08-05 04:45 GMT
நட்டாலம் மகாதேவர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடர்சிங் உள்பட 65 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கக்கோரி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவில்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில் நாகராஜாகோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், சிவக்குமார், அஜித், நாஞ்சில் ராஜா, சுனில் அரசு மற்றும் நிர்வாகிகள் 105 பேர் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குமாரகோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் ஸ்ரீனிவாச பிரம்மா உள்பட 70 பேர் மீதும், குழித்துறை மகாதேவர் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை தலைவர் முருகன், சேகர், ரெத்தினமணி, தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் 90 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நட்டாலம் மகாதேவர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடர்சிங் உள்பட 65 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News