செய்திகள்
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

2, 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்டு 9-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு

Published On 2021-07-28 09:43 GMT   |   Update On 2021-07-28 09:43 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திலும் அரியர் வைக்கும் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு படிக்க முடியும் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டு உள்ளது.
சென்னை:

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்டு 9-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படும்.

கொரோனா பரவலை பொறுத்து கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

எல்லா கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரே விதமான சமமான கல்வி நடைமுறை பின்பற்றப்படும். கடந்த ஆட்சியில் இது போன்ற முறை இல்லை.

அரசு கலைக் கல்லூரிகளில் சேர 1 லட்சத்து 26 ஆயிரத்து 748 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நேரடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம்.



அண்ணா பல்கலைக்கழகத்தை போலவே மற்ற கல்லூரிகளிலும் மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சங்கங்கள் கோரிக்கைகள் வைத்துள்ளன. இது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திலும் அரியர் வைக்கும் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு படிக்க முடியும் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News