செய்திகள்
பூசணி

பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2021-07-09 07:32 GMT   |   Update On 2021-07-09 07:32 GMT
ஆவணி மற்றும் அடுத்து வரும் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பூசணிக்கு தேவை அதிகம் இருக்கும்.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன நீர் குறைவான பகுதிகளில் மாற்றுப்பயிர் விவசாயிகளுக்கு கை கொடுக்கின்றன. இதில் குறிப்பிடும்படியாக பூசணி சாகுபடி உள்ளது.

தற்போது ஊரடங்கிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பான வாழ்க்கை முறை திரும்ப தொடங்கியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆவணி மற்றும் அடுத்து வரும் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பூசணிக்கு தேவை அதிகம் இருக்கும். இதை எதிர்பார்த்து சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். நன்கு வளர்ச்சியடைந்த ஒரு பூசணி மூன்று முதல் ஐந்து கிலோ வரை எடை இருக்கும்.

ஒரு ஆண்டு வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் என்பதால், இது நம்பிக்கையான சாகுபடியாக உள்ளது.தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பூசணியை  வரும் அக்டோபர்  மாதம் அறுவடை செய்யலாம் என்றனர்.
Tags:    

Similar News