செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2021-07-08 05:45 GMT   |   Update On 2021-07-08 05:45 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று 1071 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2 ஆயிரத்து 535 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 77.29 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 76.41 அடியானது.

Tags:    

Similar News