செய்திகள்
கோப்புப்படம்

காங்கயம் விற்பனைக்கூடத்தில் ரூ.2.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

Published On 2021-07-07 08:19 GMT   |   Update On 2021-07-07 08:19 GMT
14 விவசாயிகள் 62 மூட்டைகள் (2,994 கிலோ) கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 14 விவசாயிகள் 62 மூட்டைகள் (2,994 கிலோ) கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.  

இதில் முத்தூர், காங்கயம் பகுதிகளை சேர்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனர். ஏலத்தில் ரூ.2.96 லட்சத்துக்கு கொப்பரைகள் விற்பனையானது. கொப்பரை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.110க்கும், குறைந்தபட்சமாக ரூ.88க்கும், சராசரியாக ரூ.100க்கும் ஏலம் விற்பனையானது.

Tags:    

Similar News