செய்திகள்
பெட்ரோல், டீசல்

டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்களின் கடன் சுமை அதிகரிப்பு

Published On 2021-07-05 09:13 GMT   |   Update On 2021-07-05 09:13 GMT
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது நடப்பாண்டு ஜூலை வரை ஒரு கி.மீட்டர் பஸ் பயணத்துக்கான செலவு ரூ.13.49-ல் இருந்து ரூ.16.22 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் அரசு பஸ்களில் பயணம் செய்கிறார்கள். தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகளும் குறைந்த அளவில் பயணம் செய்வதால் தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி அரசு பஸ்கள் நாளொன்றுக்கு சராசரியாக 84 லட்சம் கி.மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டன.

இப்போது அதே தூரத்துக்கு பஸ்களை இயக்குவதற்கு டீசல் விலை உயர்வு காரணமாக மாதம் ரூ.68.7 கோடி கூடுதலாக போக்குவரத்து கழகங்கள் செலவு செய்ய வேண்டி உள்ளது.

3 வருடத்திற்கு முன் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அப்போது டீசல் லிட்டர் ரூ.65.50-க்கு விற்பனையானது. தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது நடப்பாண்டு ஜூலை வரை ஒரு கி.மீட்டர் பஸ் பயணத்துக்கான செலவு ரூ.13.49-ல் இருந்து ரூ.16.22 ஆக அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன. கடன் சுமை அதிகரித்து வருகிறது.


Tags:    

Similar News