செய்திகள்
கோப்புப்படம்

முதல்-அமைச்சர் விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அரவிந்த் தகவல்

Published On 2021-06-27 10:14 GMT   |   Update On 2021-06-27 10:14 GMT
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.07.2021 ஆகும்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் மற்றும் 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்- அமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ஒரு லட்சம் ரூபாய், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி வருகிறது.

இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். முதல்- அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (www.sdat.tn.gov.tn) மூலம் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அடங்கிய உறைமேல் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.07.2021 ஆகும்.
Tags:    

Similar News