செய்திகள்
அபராதம்

நீலாம்பூர், இருகூர் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 8 தொழிற்சாலைகளுக்கு அபராதம்

Published On 2021-06-23 10:20 GMT   |   Update On 2021-06-23 10:20 GMT
ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றித் திரியும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கும் பொதுமக்கள் மீதும் அபராதம் பேரூராட்சி சார்பில் விதிக்கப்பட்டது.

நீலாம்பூர்:

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட இருகூர், காமாட்சிபுரம், அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பல கம்பெனிகள் வேலையாட்களை வைத்து இயங்கி வருவதாக பேரூராட்சிக்கு தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் அனுமதி நடைபெற்ற கம்பெனிகளுக்கு சென்று நேரடியாக பார்வையிட்டனர் அப்போது அதிக பணியாட்களை வைத்து வேலையில் ஈடுபட்டு இருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் அந்த கம்பெ னியில் வேலை செய்த பணியாட்களுக்கு நோய் தொற்று பரவும் நேரத்தில் சமூக இடைவெளி இல்லாமல் பணியாற்றுவது ஏற்புடையது அல்ல எனக்கூறி பேரூராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். பின்னர் ஊரடங்கு விதிமுறையை மீறி நடைபெற்ற கம்பெனிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இருகூர் பகுதியில் செயல்பட்டு வந்த விசைத்தறி கூடம் மற்றும் எந்திரத் தொழில் கூடங்கள் மற்றும் பனியன் கம்பெனி உள்ளிட்ட 8 கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றித் திரியும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கும் பொதுமக்கள் மீதும் அபராதம் பேரூராட்சி சார்பில் விதிக்கப்பட்டது. ஒரே நாளில் மட்டும் சுமார் 45 ஆயிரத்திற்கு மேல் பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News