செய்திகள்
கோப்புப்படம்

ஆவின்பால் விற்பனையை அதிகரித்து நஷ்டத்தை சரிசெய்வோம்- அமைச்சர் சா.மு. நாசர் அறிவிப்பு

Published On 2021-06-23 07:41 GMT   |   Update On 2021-06-23 07:41 GMT
ஆவின் பால் உற்பத்தியை பெருக்கி விற்பனையை அதிகப்படுத்துவதன் மூலம் நஷ்டத்தை ஈடு செய்ய பரிசீலித்து வருவதாக அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

சென்னை:

சட்டசபையில் இன்று அக்ரி. கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.) பேசும்போது, ஆவின் பால் விலை குறைப்பின் காரணமாக அரசுக்கு எற்பட்ட இழப்பு குறித்து பேசினார்.

அப்போது ஆவின் நிறுவனத்தில் ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பதில் கூறியதாவது:-

ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பின் காரணமாக ரூ.260 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதை ஈடுகட்ட ஆவின் பால் உற்பத்தியை பெருக்கி விற்பனையை அதிகப்படுத்துவதன் மூலம் நஷ்டத்தை ஈடு செய்ய பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News