செய்திகள்
அய்யலூரில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காந்திராஜன் எம்.எல்.ஏ. நிவாரண பொருட்களை வழங்கியபோது எடுத்த படம்.

வடமதுரை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் - காந்திராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2021-06-18 13:29 GMT   |   Update On 2021-06-18 13:29 GMT
7 ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 2-வது தவணை கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
வடமதுரை:

வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூர், கொசவபட்டி, தென்னம்பட்டி, பிலாத்து உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 2-வது தவணை கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். அதன்பின்னர் அய்யலூரில் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்கள் தொகுப்பையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கிய வகையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன் (வடமதுரை), சீனிவாசன் (குஜிலியம்பாறை), நகர செயலாளர்கள் கணேசன் (வடமதுரை), கருப்பன் (அய்யலூர்), சம்பத் (குஜிலியம்பாறை), முன்னாள் வேடசந்தூர் ஒன்றிய தலைவர் பிரியம் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரவிசங்கர், சக்திவேல், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஜீவா, ஒன்றிய துணை செயலாளர் தம்பி கருணாநிதி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செந்தில்முருகன், மோர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கணேசன், இளங்கோ, பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News