செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரை நகர் பகுதியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

Published On 2021-06-15 03:26 GMT   |   Update On 2021-06-15 03:26 GMT
மதுரை மாநகராட்சி பகுதியில் கடந்த 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 649 மட்டுமே ஆகும்.
மதுரை:

கொரோனா இரண்டாம் அலையில் இந்திய அளவில் அதிக தொற்று பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றது. அதேபோல், தமிழகத்தை பொறுத்த அளவில் தொற்று பரவலில் மதுரை மாவட்டம் அதிக தொற்று காணப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் இடம் பெற்றது. ஏப்ரல் மாத காலத்தில் உச்சபட்ச அளவாக 4 ஆயிரம் என்ற அளவில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகியது. கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சுகாதார துறை தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. அதேவேளையில், கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது.

கடந்த 4 வாரங்களாக அமல்படுத்தப்பட ஊரடங்கு நேற்று முதல் பெருமளவு தளர்வுகளுடன் தொடர்கிறது. தற்போது மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது தெரிய வந்தது. நேற்றைய நிலவரப்படி மதுரை மாநகராட்சி பகுதியில் கடந்த 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 649 மட்டுமே ஆகும்.

தற்போதைய நிலையில் நேற்று கிடைத்த புள்ளி விவரங்கள்படி மதுரை கண்ணனேந்தல் பகுதியில் தொற்று பாதிப்பு 51, சம்பந்தர்குளம் 51, ஆனையூர் 49, பொன்மேனி 49, கற்பக நகர் 47, திருப்பாவை 40, மஸ்தான்பட்டி 40, உத்தங்குடி 34, மேலமடை 33, பழங்காநத்தம் 31, கோச்சடை 30, விசாலாட்சி நகர் 30, பெத்தானியாபுரம் 29, நாகானாகுளம் 29, பீ.பி குளம் 27, மாடக்குளம் 27, திருநகர் 27, சின்ன அனுப்பானடி 27, காந்தி நகர் 26, தாசில்தார் நகர் 26, சொக்கிக்குளம் 26, சுந்தர்ராஜபுரம் 26, ஹார்விபட்டி 26 என்ற அளவில் உள்ளது.

கடந்த 4 மாதங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. சமூக இடைவெளியை தீவிரமாக கடைப்பிடித்தல், அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தல், தடுப்பூசி போடுவது போன்ற வழிமுறைகளின் மூலம் மதுரை பகுதியில் கொரோனா தொற்று இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Tags:    

Similar News