செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகள் திறப்பது எப்போது?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

Published On 2021-06-14 07:53 GMT   |   Update On 2021-06-14 07:53 GMT
தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
சென்னை:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் இருக்காது. மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும்.


பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தளர்வுகளை பொருத்து முடிவு செய்யப்படும்.



மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை.

ஆன்லைன் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் நடத்தப்படுவது தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News