செய்திகள்
கொரோனா வைரஸ்

ஊரக பகுதிகளில் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரம்

Published On 2021-06-13 09:49 GMT   |   Update On 2021-06-13 09:49 GMT
ஊரக பகுதிகளில் வீடு. வீடாக செல்லும் ஊழியர்கள் காய்ச்சல், சளி தொந்தரவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

செட்டிபாளையம்:

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரக பகுதிகளிலும் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து பேரூராட்சிகளிலும் வீடு. வீடாக செல்லும் ஊழியர்கள் காய்ச்சல், சளி தொந்தரவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி எட்டிமடை பேரூராட்சியில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை வருவாய் கோட்டாட்சியர், மதுக்கரை துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தனர். மேலும் தினம்தோறும் பெறப்படும் இந்த கணக்கு தனித்தனியாக ஒவ்வொரு நாளும் எழுதி வாங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News