செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்பு?

Published On 2021-06-10 08:23 GMT   |   Update On 2021-06-10 08:23 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து முழு ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். 

அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததால் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாட்டுடன் டோக்கன் முறையில் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News